Showing posts with label tamil kavithai. Show all posts
Showing posts with label tamil kavithai. Show all posts

சாகாத வரம் கேட்டேன்

சாகாத வரம் கேட்டேன்.
சாதனை படைப்பதற்கு...!
அந்த சாதனையே...
உன்னை அடைவதற்கு...!

எந்த நாடு சென்றாலும்.
உன் நினைவுகள் - என்
நெஞ்சை விட்டு அகலாது.
உன் மழலை பேச்சில்
வரும் மயக்கம்............
உன் கன்னம் குழிச்சிரிப்பில்
வரும் கலக்கம்...............
உன் கண் பார்வையில்
வரும் காதல்...................
உன் நடை, இடை....யில்
என்னையே மறந்தேன்.

என்னுடல் மட்டும்
என்னுடன்..............
என்னுயிர் உன்னுயிரில்...!
உனக்காய் எதையும் செய்வேன்
உனக்காய் என் உயிரையும்.....!!!

பிடிக்காமல் போனவைகள் -

எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
எப்போதும் நான் சிந்தித்ததில்லை
ஆனால்
கவிதைகள் எனக்கு பிடிக்காமல்
போனபோது கொஞ்சம்
யோசித்துப்பார்த்தேன்

கவிதைகளை எனக்கு
மிகவும் பிடித்திருந்தது
அப்போது நான்
கவிதைகளை படிக்கத் தொடங்கவே இல்லை
கவிதைகள் என்றால்
புல்லரிக்கும் எனக்கு
அப்போதெனக்கு
கவிதைகள் புரிவதேயில்லை.
கவிதைகள் புரியத்தொடங்கியபோது
கவிதையே வாழ்க்கையானது

கவிதைகளை நான்
கிறுக்கத் தொடங்கிய போதுதான்
கவிதைகள் கொஞ்சம்
உதைக்கத் தொடங்கியது
கவிதைகளை நான்
யோசித்தபோது
கவிதைகள் எனக்கு
வெறுக்கத் தொடங்கியது
கவிதைகள் எனக்குள்
தானாய் வந்தபோது
கவிதைகள் எனக்கு
சுத்தமாய் பிடிக்காமல் போனது.
ஏனென்றால் கவிதைகள்
உண்மைகளை சொல்லிவிடுகின்றன
எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
நான் சிந்திப்பதேயில்லை.

Natpu Kavithai

 

Knowledge Kings Copyright © 2009